அடிக்கடி ஏடிஎம் கார்டு யூஸ் பண்றீங்களா? இந்த ரூல்ஸ் குறித்து தெரியுமா உங்களுக்கு? 


 மாதத்துக்கு 3 முறையும் இலவசமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. 

வங்கியில் நம்முடைய கணக்கில் இருக்கும் பணத்தை நாம் செலவு செய்வதற்கு டெபிட் கார்டு பயன்படுகிறது. வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை நினைத்த நேரத்திற்கு தேவைப்படும் போதெல்லாம் எடுத்துக் கொள்ளலாம். இந்த அவசர உலகில் டெபிகார்ட் இல்லாத நபர்களையே பார்க்க முடியாது. முன்பெல்லாம் கிரேட்டிட் கார்ட் இருந்தால் ஆல்னைல் ஷாப்பிங்கில் பிடித்த பொருட்களை வாங்க முடியும். 

இஎம்ஐ வசதிக் கூட கிரேடிட் கார்டு இருந்தால் மட்டுமே சாத்தியம். ஆனால், இப்போது எல்லாமே மாறிவிட்டது. டெபிகார்ட் இருந்தால் கூட ஆன்லைன் ஷாப்பிங் செய்யலாம். அதே போல் வங்கிகள் குறைந்த பட்ச பேலன்ஸ், ஏ.டி.எம். பண பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு உள்ளிட்டவற்றை சேவைகளை இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஆனால் அதே சமயத்தில் ஏ.எடி.எம்.மில் டெபிகார்ட் பணபரிவர்த்தனையில் வாடிக்கையாளர்களிடம் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. 

 இந்த கட்டண சேவை ஒவ்வொரு வங்கிக்கு ஏற்ப மாறுபடுகிறது. ஏ.டி.எம். பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரி சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நம் வங்கிகளை சாராத பிற ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்தல், நாம் கணக்கு வைத்துள்ள வங்கிகளின் ஏடிஎம்-ல் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தல் ஆகியவற்றிற்கு கட்டணம் வசூல் பொருந்தும். 

 அதாவது, கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் மையங்களில் இருந்து மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கிகளின் ஏடிஎம்களில் மாதத்துக்கு 3 முறையும் இலவசமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
1. எச்டிஎப்சி வங்கி:
அக்கவுண்ட் தொடங்குபவர்களுக்கு இலவச டெபிகார்ட்.டெபிகார்ட் தொலைந்தால் 200.ரூ கட்டணம்.முதல் 5 பணபரித்தனை சேவை முற்றிலும் இலவசம் (அனைத்து வங்கிகளின் ஏஎடிஎம்) ஒரு மாதத்திற்கு எச்எடிஎப்சி வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் முற்றிலும் இலவசம்.ஆனால். பிற வங்கிகளின் ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால்ரூ. 20 கட்டணம்.ஆண்டுந்தோறும் டெபிகார்டு கட்டணம் ரு. 150
2. ஐசிஐசிஐ வ்ங்கி:
ஐசிஐசிஐ டெபிட் கார்டை பெற ரூ. 250 செலுத்த வேண்டும். வருடத்திற்கு ரூ. 250. டெபிகார்டை தொலைத்தால் ரூ. 199. அதே போல், ஐசிஐசிஐ வங்கிகளில் எத்தனை முறை வேண்டுமானலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மற்ற எடிஎம்களில் 3 முறைக்கு சென்றால் ரூ. 20.
3. எஸ்பிஐ வங்கி:
கோல்ட் டெபிகார்ட் கார்டு கட்டணம் ரூ.100 ப்ள்ஸ் ஜிஎஸ்டி, ப்ளாட்டினம் டெபிகார்ட் கார்டு கட்டணம் ரூ.306 ப்ள்ஸ் ஜிஎஸ்டி, கிளாசிக் டெபிகார்ட் கார்டு கட்டணம் ரூ.100 ப்ள்ஸ் ஜிஎஸ்டிடெபிட் கார்டு ஆண்டு கட்டணம் ரூ. 150, டெபிட்கார்டு தொலைந்தால் 200.ரூ கட்டணம்.


Post a Comment

Previous Post Next Post

Search here!