வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் கைவிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது. - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 11 February 2021

வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் கைவிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் கைவிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது. 


பொதுப்பணிகள் 22.1.2019 முதல் 30.1.2019 வரை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க அவற்றின் மீதான மேல்நடவடிக்கைகளை கைவிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது. 

பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (கே) துறை 

1. அரசாணை (நிலை) எண்.9 நாள்: 2.2.2021 சார்வரி, தை-20. திருவள்ளுவர் ஆண்டு, 2052 படிக்க: 1. அரசுக் கடித எண்.38148/கே1/2018-11, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (கே1) துறை, நாள் 18.1.2019. 

2. தலைவர், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், சென்னை - 600 009, கடித எண்.163/ததசெச/2019, நாள் 1.2.2021. 

3. தலைவர், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், சென்னை - 600 005, கடித நாள் 1.2.2021. 

ஆணை:

 சில அரசுப் பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, 22.1.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற பணியாளர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சாலை மறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனிடையே, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுடைய போராட்டங்களை உடனடியாக கைவிட்டு, மக்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு 31.1.2019 அன்று முதல் பணிக்குத் திரும்பினர். 

2. இந்நிலையில், மேற்குறிப்பிட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும்  (தொடர்ந்துப் படிக்க PDF பைலைக் கிளிக் செய்யவும்)

You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment