நீக்கிய கோப்புகளைத் திரும்பப் பெற இன்ஸ்டாகிராமில் புதிய வசதி
இன்ஸ்டாகிராமில் நீக்கிய கோப்பு அல்லது தகவல்களை திரும்பப் பெறும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் நீக்கிய கோப்புகளை 30 நாள்களுக்குள் பயனர்களால் திரும்பப் பெற்றுக்கொள்ள இயலும்.
உல அளவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் செயலியில் இன்ஸ்டாகிராம் முக்கியப் பங்காற்றுகிறது. புகைப்படம் மற்றும் விடியோக்களை பதிவு செய்ய உருவாக்கப்பட்ட இந்த செயலியில் கூடுதலாக பல அம்சங்களும் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தற்போது நீக்கிய கோப்புகளை 30 நாள்களுக்குள் திரும்பப் பெறும் 'ரீசன்ட்லி டெலிடட்' என்ற அம்சம் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயனர்கள் நீக்கிய புகைப்படங்கள், விடியோக்கள், ரீல்ஸ், ஸ்டோரிஸ் போன்றவற்றை ஒரு மாதத்திற்குள் நாம் திரும்ப நினைவகத்தில் சேமித்து வைக்க முடியும் என்று இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment