தமிழ் வழியில் படித்து, அதிக மதிப்பெண் பெறும், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வில், தலா 15 பேர் வீதம், மாவட்டத்துக்கு 30 மாணவர்கள் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு ரொக்கப்பரிசுடன், சான்றிதழ் வழங்கப்படும். இவ்விருதுக்கு தகுதியானோர் பட்டியலை ஆய்வு செய்து, வரும் 5ம் தேதிக்குள் அனுப்ப, இயக்குனரகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர்கள் கூறுகையில்,'பத்தாம் வகுப்பில் படிப்போருக்கு, தலா 10 ஆயிரம், பிளஸ் 2 மாணவர்களுக்கு, தலா 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும். இம்மாத இறுதிக்குள், விருது வழங்கப்படும்' என்றனர்.
காமராஜர் விருதுக்கு ஆய்வுப்பணி
No comments:
Post a Comment