2021-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் மற்றும் TML கட்டணம் செலுத்துதல்
அனுப்புநர்
முனைவர். சி. உஷாராணி,
அரசுத் தேர்வுகள் இயக்குநர்,
எம்.எஸ்ஸி., பி.எட்., பிஎச்.டி.,
அரசுத் தேர்வுகள் இயக்குநர்,
சென்னை - 600 006.
பெறுநர்
அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி
இயக்குநர்கள்
இணை இயக்குநர்(கல்வி), பாண்டிச்சேரி
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
ந.க.எண். 086254 | எப்1/2020
நாள்.1102.2021
ஐயா / அம்மையீர்,
பொருள் :
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6 - 2020-
2021-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு /
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள்
பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை பதிவேற்றம்
செய்வதற்கும், தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும்
கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் மற்றும் TML
கட்டணம் செலுத்துதல் - தொடர்பாக.
பார்வை :
அரசுத் தேர்வுகள் இயக்குநரின் இதே எண்ணிட்ட
செயல்முறைகள், நாள் 27.01.2021
பார்வையில் காணும் இவ்வலுவலகச் செயல்முறைகளில், 2020-2021-ஆம்
கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணாக்கரது விவரங்களை 01.02.2021 முதல் 11.02.2021 வரையிலான நாட்களில் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து, தேர்வுக் கட்டணத்தினையும் இணையதளம் வாயிலாக செலுத்தவேண்டும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் ஒரு சில பள்ளிகளின் மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதில் சில சிரமங்கள் ஏற்படுகின்றன எனத் தெரிவித்துள்ளதால், பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கும், இணையதளம் மூலம் தேர்வுக்கட்டணத்தினை செலுத்துவதற்கும் 12.02.2021 முதல் 18.02.2021 வரையிலான நாட்களில் கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது.
Download Timer
No comments:
Post a Comment