நீங்க INSTAGRAM ல இருக்கிங்களா? அப்ப இத படிங்க!!
எல்லை மீறிய தவறான நேரடி குறுஞ்செய்திகளை அனுப்பும் கணக்குகள் முடக்கப்படும் என்று இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் இன்ஸ்டாகிராம் செயலி உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவிலும் ஏராளமானோர் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் புகைப்படம் மற்றும் விடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதில் பயனர்கள் நேரடியாக குறுஞ்செய்திகளை அனுப்பி தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வசதியும் உள்ளடங்கியுள்ளது.
PLEASE READ THIS ALSO : ஆடியோ செயலியின் பக்கம் கவனத்தைத் திருப்பும் முகநூல் நிறுவனம்
இதனிடையே நேரடி குறுஞ்செய்திகளாக தவறான தகவல்களை அனுப்பும் கணக்குகள் முடக்கப்படும் என்று இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.
முன்பு நேரடி குறுஞ்செய்திகளாக தகவறான தகவல்களை பகிரும் பயனாளரின் கணக்கு மற்ற பயனர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்ப முடியாத அளவிற்கு குறிப்பிட்ட காலத்திற்கு தனித்து வைக்கப்படும்.
ஆனால் தற்போது தவறான தகவல்களை அனுப்பும் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து கால்பந்து வீரர்களைக் குறிவைத்து இனவெறியைத் தூண்டும் விதமாக தகவல்கள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment