ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் பெயர் எழுதும் முறை - RTI மூலம் பெறப்பட்ட தகவல் - EDUNTZ

Latest

Search here!

Thursday, 4 February 2021

ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் பெயர் எழுதும் முறை - RTI மூலம் பெறப்பட்ட தகவல்

 ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் பெயர் எழுதும் முறை - RTI மூலம் பெறப்பட்ட தகவல்



தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் கிருஷ்ணகிரி முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அவர்களின் செயல்முறைகள்

ஒ.மு.எண். 01470 / அ 2 / 2015, நாள் 27-04-2015

பொருள்

தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005 கீழ் திரு.அ.மாதையன், அஜ்ஜிபட்டி கிராமம், மானியாத அள்ளி அஞ்சல், நல்லம்பள்ளி வழி, தர்மபுரி மாவட்டம் என்பார் சில தகவல்கள் கோரியது - தகவல்கள் வழங்குதல் - சார்பாக.

பார்வை

திரு.அ.மாதையன், அஜ்ஜிபட்டி கிராமம், மானியாத அள்ளி அஞ்சல், நல்லம்பள்ளி வழி, தர்மபுரி மாவட்டம் என்பாரது மனு நாள் 06-04-2015 

பார்வையில் காணும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ன்படி தங்களது மனு பரிசீலிக்கப்பட்டதில் தங்களால் கோரப்பட்ட நான்கு வினாக்களுக்கு சார்பாக கீழ்க்கண்ட தகவல்கள் அளிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர்கள் அவர்கள் பெறுகின்ற சம்பள ஏற்ற முறையில் உள்ள தர ஊதியத்தின் அடிப்படையில், இறங்கு வரிசையில் எழுத வேண்டும். ஒருகுறிப்பிட்ட பணியில் / பதவியில் ஒன்றுக்கு மேற்பட்டவர் ஒரே நாளில் மற்றும் ஒரே நேரத்தில் (மு.ப. /பி.ப.) பணியில் சேர்ந்திருந்தால் அவர்களது பெயர்கள் பிறந்த தேதி மற்றும் அகர வரிசை ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்படும். ஒரே நாளில் இருவர் பணியில் சேர்ந்திருந்தால் அவர்களில் வயதில் மூத்தவர் முதலிலும், வயதில் இளைவர் அவர்களுக்கு அடுத்தும் எழுத வேண்டும். இருவருக்கும் பிறந்த தேதி ஒன்றாகவே இருக்குமேயானால் அவர்களது பெயர்கள் அகர வரிசை அடிப்படையில் எழுதப்படும். மேலும் வருகை பதிவேட்டில் பெயர் எழுதப்படுவதற்கு பாடம் சம்மந்தமாக முன்னுரிமை ஏதும் வழங்கப்படுவதில்லை. மேற்கண்ட தகவல்கள் தங்களால் ஆட்சேபிக்கப்படுமேயானால் இக்கடிதம் கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் கீழ்க்கண்ட அலுவலருக்கு மேல் முறையீடு செய்துக்கொள்ளலாம்.


No comments:

Post a Comment