மத்திய அரசு பணிகள் - ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் (SSC) 


 ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மூலம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளை செய்யும் செயல்திறன் கொண்ட மல்டி டாஸ்கிங் பணியாளர்களை (நான் டெக்னிக்கல்) தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு அலுவலகங்களில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு. 10-ம் வகுப்பு அடிப்படை கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேப்பர் -1, பேப்பர் -2 என இரு பிரிவாக கணினி வழியிலான தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-3-2021. விண்ணப்பிக்கும் விதம், விதிமுறைகள் பற்றிய விரிவான விவரங்களை https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

Post a Comment

Previous Post Next Post

Search here!