01.04.2013 தேதி முதல் அரசுப்பணியில் பட்டப் படிப்புடன் இளநிலை உதவியாளராக / தட்டச்சராக பணியில் இணைந்து பட்டப்படிப்பு முடித்தமைக்காக இரண்டு முன் ஊதிய உயர்வுகள் வழங்க கோருவது சில தெளிவுரைகள் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 29 March 2021

01.04.2013 தேதி முதல் அரசுப்பணியில் பட்டப் படிப்புடன் இளநிலை உதவியாளராக / தட்டச்சராக பணியில் இணைந்து பட்டப்படிப்பு முடித்தமைக்காக இரண்டு முன் ஊதிய உயர்வுகள் வழங்க கோருவது சில தெளிவுரைகள்

பணியாளர் தொகுதி 01.04.2013 தேதி முதல் அரசுப்பணியில் பட்டப் படிப்புடன் இளநிலை உதவியாளராக / தட்டச்சராக பணியில் இணைந்து பட்டப்படிப்பு முடித்தமைக்காக இரண்டு முன் ஊதிய உயர்வுகள் வழங்க கோருவது சில தெளிவுரைகள்




பதிவஞ்சல் ஒப்புகை அட்டையுடன் 
ந.க.எண்.58496/பதொ4/இரு 2/2019 

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை, 
சென்னை-6 
நாள். 26.03.2021 

பொருள் 

பொது சுகாதாரம் - பணியாளர் தொகுதி - தமிழ்நாடு அமைச்சுப்பணி - 01.04.2013 தேதி முதல் அரசுப்பணியில் பட்டப் படிப்புடன் இளநிலை உதவியாளராக / தட்டச்சராக பணியில் இணைந்து பட்டப்படிப்பு முடித்தமைக்காக இரண்டு முன் ஊதிய உயர்வுகள் வழங்க கோருவது சில தெளிவுரைகள் வழங்குவது - தொடர்பாக. 

1) அரசாணை (நிலை) எண்.241 நிதித்துறை, நாள்.22.07.2013. 
2) அரசுக்கடித எண்.16115/சிஎம்பிசி/2018-1, நிதித்துறை, நாள்.25.05.2018.
 3) அரசு ஆணை (நிலை) எண்.37, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை (அவி-IV), நாள்.10.03.2020. 

பார்வை ........ பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் அரசுக் கடிதத்தின் மீது அனைத்து சார்நிலை அலுவலர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. 

2) பார்வை ஒன்றில் காணும் அரசு ஆணை பத்தி எண்-5ல் இளநிலை உதவியாளர் / தட்டச்சர் ஆகியோர்களுக்கு பட்டப்படிப்பு முடித்ததற்காக வழங்கப்படும் இரண்டு முன் ஊதிய உயர்வு 01.04.2013 தேதி முதல் பணியில் இணைந்தவர்களுக்கு நிறுத்தப்பட்டு ஆணை வழங்கப்பட்டது. மேலும் அதற்கான தெளிவுரை பார்வை இரண்டில் காணும் அரசு கடிதத்தின் பத்தி 6(i)-ல் வழங்கப்பட்டுள்ளது. 

3) பார்வை மூன்றில் காணும் அரசு ஆணையில் பத்தி 6(vi)ல் வழங்கியுள்ள ஆணைகளின்படி அரசுப்பணியாளர் எவரேனும் 10.03.2020 தேதிக்கு முன்பாக பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று அரசுப் பணியில் சேர்ந்து அப்பட்டப்படிப்பு முடித்தமைக்கான இரண்டு முன் ஊதிய உயர்வுகள் பெறாமல் இருப்பின் இத்துறையின் சம்மந்தப்பட்ட நிர்வாகத் துறையின் மூலம் நிதித்துறையின் ஒப்புதல் பெறுவதற்குரிய கருத்துருவினை அனுப்பவேண்டும் என அரசால் தெரிவிக்கப்பட்டது. 

4) அவ்வாறாக இத்துறையைச் சேர்ந்த இளநிலை உதவியாளர் ஒருவர் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 10.03.2020 தேதிக [11:54 AM, 3/29/2021] ♏iller: -2- 5) எனவே, அனைத்து சார்நிலை அலுவலர்களும் மேற்காணும் பொருள் குறித்து பார்வை- ஒன்றில் காணும் அரசாணையில் பத்தி எண்.5 மற்றும் பார்வை இரண்டில் காணும் அரசு கடித பத்தி எண்டு(ii)-ன்படி வழங்கியுள்ள ஆணை/தெளிவுரையின்படி நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தி.சி.செல்வவிநாயகம் 
இயக்குநர் 
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை 
சென்னை-6 

பெறுநர் 

அனைத்து சார்நிலை அலுவலர்கள். 

நகல் 

இயக்குநரின் நேர்முக உதவியாளர். 

//உண்மை நகல் // உத்திரவின்படி // அனுப்பப்படுகிறது// 

PLEASE WAIT FOR A MOMENT TO DOWNLOAD OFFICIAL COPY


You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment