பஞ்சாப்பில் 10, 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 16 March 2021

பஞ்சாப்பில் 10, 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு

பஞ்சாப்பில் 10, 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு 


பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று ஒரு நாளில் மட்டும் 1,492- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 


கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பஞ்சாப்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 9- ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் வரும் 22 ஆம் தேதி 12-ஆம் தேர்வும் நடைபெறுவதாக இருந்தது. 


தேர்வு நடைபெறும் புதிய தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வு மே 4- 24 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் 12 ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 20- மே 24 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment