இத்தாலியில் கண்டறியப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான தேர் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 20 March 2021

இத்தாலியில் கண்டறியப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான தேர்

இத்தாலியில் கண்டறியப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான தேர் 


சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர் ஒன்று இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தெற்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்று தான் இத்தாலி. இத்தாலியின் தென் பகுதியில் உள்ள தொன்மையான நகரம் பாம்பேய். 




இந்த நகரத்தை அடையாளம் காட்டுவது எரிமலை சீற்றம் தான். கி.பி.79ல் வெசுவியஸ் மலையில் எரிமலை சீற்றம் ஏற்பட்டதில் பாம்பேய் நகரம் முழுவதிலும் அதன் சாம்பல் படிந்தது. இந்த நிலையில் பாம்பேய் நகரில் சுமார் 2,000 ஆண்டுகள் முன்னதாக பயன்படுத்தப்பட்ட தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


4 சக்கரங்களுடன் காணப்படும் தேர், பழங்காலத்தில் குதிரைகள் கட்டிப்போட பயன்படுத்திய லாயத்தின் அருகில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாம்பேய் நகரின் வடக்கு பகுதியில் உள்ள சிவிட்டா கைலியனா எனும் பழங்கால மாளிகையின் முற்றத்திலும் தேர் இருந்துள்ளதாக தொல்லியல் ஆய்வு கூறுகின்றன.

No comments:

Post a Comment