பொது தேர்தல் 2021 : கொரோனா பரவலை தடுக்க 13 வகையான உபகரண பெட்டகம் - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 30 March 2021

பொது தேர்தல் 2021 : கொரோனா பரவலை தடுக்க 13 வகையான உபகரண பெட்டகம்

பொது தேர்தல் 2021 கொரோனா பரவலை தடுக்க 13 வகையான உபகரண பெட்டகம் 

தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 88,936 ஓட்டுச்சாவடிகளுக்கும் 13 வகையான கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி ஓட்டுச்சாவடிகளில் வருவோர் அனைவருக்கும் வெப்ப நிலை பரிசோதனை செய்யும் வகையில் 


  • தெர்மல் ஸ்கேனர், 
  • கைகள் சுத்தம் செய்வதற்கான சானிடைசர் மற்றும் சோப்பு, 
  • ஒவ்வொரு வாக்காளர்களுக்கான ஒரு கையுறை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 

மேலும் கொரோனா நோயாளிகள் வரும்போது அவர்களுக்கான முழு உடற்கவசம் உள்ளிட்டவையும் அங்கு பணியில் ஈடுபடுபவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment