இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 29.03.2021 (திங்கள் கிழமை) விடுமுறை: முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 27 March 2021

இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 29.03.2021 (திங்கள் கிழமை) விடுமுறை: முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

இந்த மாவட்டத்தில் உள்ள  அனைத்து வகை பள்ளிகளுக்கும் 29.03.2021 (திங்கள் கிழமை) விடுமுறை: முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் 

ந.க. எண்.2093/அ1/2020, நாள்.27.03.2021 


பொருள் 

தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தல் 2021 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 29.03.2021 அன்று வாக்கு பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறுதல் - பயிற்சி நடைபெறும் நாளன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆணையிடுதல் - சார்பு. 



கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி தலைவரின் கடிதம் 

ந.க.எண்.எச்1/9696/2020, நாள். 26.03.2021 

பார்வை பார்வையில் காணும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரின் கடிதத்திற்கிணங்க எதிர்வரும் 29.03.2021 (திங்கட்கிழமை) அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட  பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

இப்பயிற்சி வகுப்பில் வாக்கு பதிவு அலுவலர்களாக அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்துக்கொள்ள ஏதுவாக பயிற்சி அளிக்கும் நாள் (29.03.2021) அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து ஆணையிடப்படுகிறது. 

ஓம்!- க.முனுசாமி, 
முதன்மைக் கல்வி அலுவலர், 
கள்ளக்குறிச்சி. 

பெறுநர் 

அனைத்துவகை பள்ளி தலைமை ஆசிரியர்கள், 
கள்ளக்குறிச்சி மாவட்டம். 

நகல் 

1.மாவட்டக் கல்வி அலுவலர்கள் கள்ளக்குறிச்சி / உளுந்தூர்பேட்டை / திருக்கோவிலூர். (உரிய தொடர் நடவடிக்கைக்காக) 
2. வட்டாரக்கல்வி அலுவலர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம். (உரிய தொடர் நடவடிக்கைக்காக) 
3. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

No comments:

Post a Comment