பிளஸ்-2 மாணவர்களுக்கும் விடுமுறை அளித்து பள்ளி அளவில் தேர்வு நடத்த பரிசீலிக்க வேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 24 March 2021

பிளஸ்-2 மாணவர்களுக்கும் விடுமுறை அளித்து பள்ளி அளவில் தேர்வு நடத்த பரிசீலிக்க வேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பிளஸ்-2 மாணவர்களுக்கும் விடுமுறை அளித்து பள்ளி அளவில் தேர்வு நடத்த பரிசீலிக்க வேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை 


தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- 

மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால், தமிழக அரசு 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கி, மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளித்தது.சுகாதாரத்துறை செயலாளர் தமிழ்நாட்டில் கொரோனா ஏறுமுகமாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். 


பொதுத் தேர்வு என்பதால் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தினந்தோறும் அச்சத்தோடு பள்ளிக்கு அனுப்பி வைப்பதாக பெற்றோர் கவலையோடு தெரிவிக்கின்றனர். எனவே பெற்றோரின் அச்சத்தை போக்கவும், மாணவர்களின் நலன் கருதியும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கி இந்த கல்வியாண்டில் பொதுத் தேர்வினை ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் தேர்வுகளை நடத்த பரிசீலிக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment