4 நாட்கள் தேர்தல் பணிக்கு முன்னாள் காவல் துறை, ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 26 March 2021

4 நாட்கள் தேர்தல் பணிக்கு முன்னாள் காவல் துறை, ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

4 நாட்கள் தேர்தல் பணிக்கு முன்னாள் காவல் துறை, ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம் 


தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை பாதுகாப்பு பணி மேற்கொள்ள முன்னாள் காவல் துறையில் பணியாற்றிய காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் தீயணைப்பு வீரர்கள், முன்னாள் ரிசர்வ் படை வீரர்கள், முன்னாள் சிறைத்துறை காவலர்கள் வரும் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஆதாவது 4 நாட்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணியில் சேரலாம். 


பணியாற்றும் 4 நாட்களுக்கான ஊதியம் வழங்கப்படும். மேலும், போக்குவரத்து, உணவு படிகளும் வழங்கப்படும். இதுகுறித்து கூடுதல் தகவல் பெற விரும்பும் நபர்கள் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது தேர்தல் ஆணையம் கட்டுப்பட்டு அறை எண்: 044-28449240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். SOURCE NEWS CLICK HERE 

No comments:

Post a Comment