அரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்? - EDUNTZ

Latest

Search Here!

Monday, 1 March 2021

அரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்?

அரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்? 


அரசு ஊழியர்கள், அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு வயது 59 -லிருந்து 60 ஆக உயர்த்தி முதல்வர் நேற்று அறிவித்திருந்த நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. 

 தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், பணியிலிருந்து ஒய்வு பெறும் வயது, 58-லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவின் பேரில், அரசாணை வெளியிடப்பட்டது. 

அரசுப் பணியாளர்களின் ஒய்வு பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது என்பது, 60 வயதாக உயர்த்தப்படும் என நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி 110 வது விதியின் கீழ் அறிவித்தார். இந்த அறிவிப்பு தற்போது அரசாணையாக வெளியாகியுள்ளது. 

அந்த அரசாணையில் வெளியிடப்பட்ட உத்தரவு வருமாறு: 

 நேற்று (பிப்.25) சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் பணியிலிருந்து ஒய்வு பெறும் வயது, 58-லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிடப்பட்டது, 

அரசாணை வெளியிடப்பட்டது. அரசுப் பணியாளர்களின் ஒய்வு பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது என்பது, 60 வயதாக உயர்த்தப்படும். இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும். 

 இந்த உத்தரவு, தற்போது அரசுப் பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது மே.31/2021 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என அறிவித்தார். அதன்படி வரும் மே மாதம் முதல் இது அமலுக்கு வருகிறது. 

இந்த அறிவிப்பு ஆசிரியர் ஆசிரியர் பணியில் இல்லாத ஊழியர்கள், அரசு கல்வி நிறுவனங்கள், அரசு உதவிப்பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான துறைகள், பொதுத்துறையின் கீழ் வரும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், சொசைட்டிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொருந்தும்....

No comments:

Post a Comment