ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் 8 ஆம் வகுப்பு சேர்க்கை - EDUNTZ

Latest

Search here!

Friday, 26 March 2021

ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் 8 ஆம் வகுப்பு சேர்க்கை

ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் 8 ஆம் வகுப்பு சேர்க்கை


டெராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் ஜனவரி 2022-ல் துவங்கும் எட்டாம் வகுப்புக்கான சேர்க்கைக்கு தகுதித்தெர்வு 2021-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 05 தேதியில் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். 

டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் ஜனவரி 2022ல் துவங்கும் எட்டாம் வகுப்புக்கான சேர்க்கைக்கு தகுதித்தெர்வு 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 தேதியில் நடைபெற உள்ளது. ஏழாம் வகுப்பு தேறிய அல்லது ஏழாம் வகுப்ப படித்துக் கொண்டிருக்கும் 01-01-2009-க்கும் 01-07-2010-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த மாணவர்கள் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். 


எனவே விபரக்கையேடு மற்றும் முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் கேள்வித்தாள்களை கட்டணம் செலுத்தி எழுத்து மூலமாக விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம். முகவரி ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளில் எழுதியிருத்தல் வேண்டும். கட்டணம் பொதுப்பிரிவினர்கள் விரைவுத் தபாலில் பெற ரூ.600/-ம், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் ரூ.555/-ம், ஜாதிச்சான்றுடன் THE COMMANDANT RIMC, DE- HRADUN என்ற பெயரில் DRAWEE BRANCH, STATE BANK OF INDIA, TEL BHAVAN BRANCH, DEHRADUN (BANK CODE-01576), UTTARA- KHAND -இல் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாகப் பெற்று 


THE COMMANDANT RASHTRIYA INDIAN MILITARY COLLEGE DEHRADUN, , UTTARAKHAND - 248 003, என்ற முகவரிக்கு விண்ணப்பத்துடன் அனுப்புதல் வேண்டும். தனியாக அச்சடிக்கப்பட்ட அல்லது நகல் எடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். டேராடூனிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை பூங்கா நகர், சென்னை 600 003 என்ற முகவரியில் 15-04-2021 அன்று மாலை 5-45 மணிக்குள் சென்று சேரத்தக்க வகையில் அனுப்பி வைத்தல் வேண்டும். 

எழுத்துத் தேர்வு ஜுன்-05 இல் நடைபெறவுள்ளது. இத்தேர்வினை ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே எழுத இயலும். எழுத்துத்தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு 06-10-202 அன்று நேர்முகத்தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு wwwrimc.gov.in என்ற இணையதளத்தில் பதிவு இறக்கம் செய்தும் மற்றும் ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண் 0424-2263227 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனவே, இந்த அரிய வாய்ப்பை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன்படுத்திப் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

DOWNLOAD NOTICE




No comments:

Post a Comment