இந்திய ராணுவ கல்லுாரி தகுதி தேர்வு அறிவிப்பு
எட்டாம் வகுப்புக்கு பின், இந்திய ராணுவ கல்லுாரியில் படிப்பதற்கான, தகுதி தேர்வுக்கு, ஏப்ரல், 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, இந்திய ராணுவ கல்லுாரி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியே, இந்திய ராணுவ கல்லுாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இந்திய ராணுவ கல்லுாரியில் சேர்வதற்கான தகுதி தேர்வு, ஜூன், 5ல், சென்னை உட்பட, சில முக்கிய நகரங்களில் மட்டும் நடக்கிறது.
கணிதம், பொது அறிவு மற்றும் ஆங்கில பாடங்கள் அடங்கிய, எழுத்து மற்றும் நேர்முக தேர்வு என, இரண்டும் நடத்தப்படும்.
ஹிந்தி மற்றும் ஆங்கிலம், பயிற்று மொழியாக இருக்க வேண்டும்; மாணவர்கள் மட்டும் தேர்வு எழுதலாம். நேர்முக தேர்வு, அக்., 6ல் நடத்தப்படும்.அதில், மாணவர்களின் நுண்ணறிவு திறன் பரிசோதிக்கப்படும்.
தேர்வில் குறைந்த பட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்.
இந்த தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை பெற, 600 ரூபாய்க்கான வங்கி வரைவோலை எடுத்து, டேராடூனில் உள்ள இந்திய ராணுவ கல்லுாரி கமாண்டன்டுக்கு அனுப்ப வேண்டும். இத்தேர்வை எழுத, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 7ம் வகுப்பு படித்து கொண்டிருக்க வேண்டும்.
தமிழக மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு, ஏப்., 15க்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விபரங்களை, www.rimc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment