கொரோனா நோயாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க கோரிக்கை - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 30 March 2021

கொரோனா நோயாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க கோரிக்கை

கொரோனா நோயாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க கோரிக்கை 


தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கொரோனா பரவல் காரணமாக, வாக்களிக்கும் நேரம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் வாக்குப்பதிவு நாளன்று கடைசி ஒரு மணி நேரம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் கடைசி நேரத்தில், வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அச்சத்தின் காரணமாக வாக்குச்சாவடிக்கு வருவதை தவிர்ப்பார்கள். இதனால் வாக்குப்பதிவு குறைய வாய்ப்புள்ளது. 


எனவே, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், அச்சமின்றி வாக்களிக்க கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் வாக்குகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment