உதவித்தொகை கிடைக்காத மாணவர் விபரம் சேகரிப்பு - EDUNTZ

Latest

Search here!

Tuesday, 23 March 2021

உதவித்தொகை கிடைக்காத மாணவர் விபரம் சேகரிப்பு

உதவித்தொகை கிடைக்காத மாணவர் விபரம் சேகரிப்பு 


பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும், கல்வி உதவித்தொகை கிடைக்கப்பெறாத மாணவர்களின் விபரம் திரட்ட, உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும், நலத்துறை பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிட, பழங்குடியின பெண் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை திட்டம் அமலில் உள்ளது. 


தவிர, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்கள் இடைநிற்றலைத் தடுக்க, ஆண்டுதோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.இச்சிறப்பு உதவித்தொகை திட்டங்களுக்கு, ஆண்டுதோறும் மாணவர்களின் தகவல்களை புதுப்பிப்பது அவசியம். 


நடப்பாண்டில் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால், சில மாணவர்கள் உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி வாரியாக, உதவித்தொகை கிடைக்க பெறாத மாணவர்களின் பட்டியல் திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.


கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'உதவித்தொகை கிடைக்கப்பெறாத மாணவர்களுக்கு, அந்தந்த கல்வியாண்டு இறுதியில், அத்தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும்.

இதனால், பள்ளிவாரியாகத் தகவல் இருந்தால் அளிக்கும்படி, தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தகவல்களைப் புதுப்பித்து, உரிய துறைகளுக்கு பட்டியல் அனுப்பி, கல்வி உதவித்தொகை பெற்றுத்தரப்படும்' என்றனர்.

No comments:

Post a Comment