நரம்பு தளர்ச்சி சரியாக எடுத்துக்கொள்ள வேண்டிய இயற்கை உணவுகள் - EDUNTZ

Latest

Search here!

Friday, 19 March 2021

நரம்பு தளர்ச்சி சரியாக எடுத்துக்கொள்ள வேண்டிய இயற்கை உணவுகள்

நரம்பு தளர்ச்சி சரியாக எடுத்துக்கொள்ள வேண்டிய இயற்கை உணவுகள்

இன்றைய இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்க கூடிய ஒரு பிரச்சனை தான் நரம்பு தளர்ச்சி. எழுதும் போது நடுக்கம், சோர்வு, களைப்பு, தலைவலி, நிலைத்தடுமாற்றம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. 

SBI ATM CARD: இந்த முக்கிய விஷயத்தை தெரியாம இருக்காதீங்க!

👉அத்திப்பழம் நரம்பு தளர்ச்சி பிரச்சனையை குணப்படுத்தி, நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் வல்லமை இதற்குண்டு. உடல் பலவீனத்தை சரி செய்து, உடல் பலத்தை அதிகரிக்கும் சக்தி அத்திப்பழத்திற்கு உண்டு. எனவே அத்திப்பழத்தை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும். 

MOST READ தெரிந்து கொள்வோம் :  முதுமையும்... ரத்த அழுத்தமும்..

👉உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தி பிரண்டைக்கு உண்டு. பிரண்டையை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதினால் நரம்பு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும். 

👉நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் மாதுளை பழத்தை அதிகம் சாப்பிடுங்கள். மாதுளை பழம் உடல் சூட்டை தனித்து, உடலை வலுப்படுத்தும், நரம்பு தளர்ச்சியை சரி செய்யும். 

MOST READ சிறுநீர் தொற்று பாதிப்பை சரிப்படுத்தும் சுரைக்காய் இளநீர் ஜூஸ்

👉நெல்லிக்காயில் உடலை வலுப்படுத்தும் அனைத்து சக்திகளும் உள்ளது. நெல்லிக்கனியை தினமும் சாப்பிடுவதினால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை குணமாகும். மேலும் உடலுக்கு எந்த ஒரு நோய்களும் ஏற்படாது. 

👉இரண்டு அல்லது மூன்று வெற்றிலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட நன்கு பசியெடுக்கும். எந்த ஒரு செரிமான பிரச்சனைகளும் ஏற்படாது. உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தி வெற்றிலைக்கு உண்டு. 

MOST READ CBSE  அறிமுகம் செய்துள்ள ARTIFICIAL INTELLIGENCE (AI) தளம் | எப்படி பதிவு செய்வது?

👉முருங்கைகீரைக்கு பொதுவாக உடலை வலுப்படுத்தும் சக்தி அதிகம் உண்டு. பலவிதமான நோய்களுக்கு கண்கண்ட மருந்து, உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும். முருங்கை கீரையை சமைக்கும் போது அதனுடன் சிறிதளவு முருங்கை பூவை சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இதனால் நரம்புகள் வலுப்படும். 

👉பேரிச்சை பழத்துடன் பால் கலந்து தினமும் சாப்பிட்டு வர உடல் வலுப்பெறும். நரம்புகள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும், தேறாத உடல் கூட பேரிச்சையுடன் பால் கலந்து சாப்பிடு வர தேறும். பலவீனமான உடல் கூட பலம் பெரும்.

No comments:

Post a Comment