கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 25 March 2021

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் 


ந.க.எண் : 848 |«4 /2020. நாள் : .03.2021 

பொருள் : 

பள்ளிக்கல்வி - கள்ளக்குறிச்சி மாவட்டம் - 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு EMIS இணையதளத்தில் உடல் நலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் (Health and IT Details) சார்ந்த விவரங்களை பதிவு செய்தல் - அனைத்து வகை தலைமையாசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள் பதிவு செய்வதை உறுதி செய்தல்-சார்பு. 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு EMIS இணையதளத்தில் உடல் நலம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் (Health and IT Details) சார்ந்த விவரங்களை 24.03.2021 மாலை 3.00 மணிக்குள் பதிவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். 


மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சார்ந்த விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களே முழு பொறுப்பேற்க நேரிடுமென தெரிவிக்கப்படுகிறது. 

இணைப்பு - பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட விவரப்பட்டியல் 

                                                                                                ஒம்/-க.முனுசாமி, 
                                                                                                முதன்மைக்கல்வி அலுவலர், 
                                                                                                கள்ளக்குறிச்சி, 

பெறுநர் : 

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம். 

நகல் : 

1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்- கள்ளக்குறிச்சி மாவட்டம்.
 2. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்- கள்ளக்குறிச்சி மாவட்டம்.
 3. அனைத்து வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள்- கள்ளக்குறிச்சி மாவட்டம்.
DOWNLOAD COPY

You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment