கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பு: புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை கவர்னருக்கு சுகாதாரத்துறை பரிந்துரை - EDUNTZ

Latest

Search Here!

Friday, 19 March 2021

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பு: புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை கவர்னருக்கு சுகாதாரத்துறை பரிந்துரை

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பு: புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை 


கவர்னருக்கு சுகாதாரத்துறை பரிந்துரை கொரோனா பரவல் அதிகரிப்பால் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை விட கவர்னருக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை புதுச்சேரியில் கொரோனாவால் நேற்று முன்தினம் 52 பேர் நேற்று 81 பேர் என பாதிப்பு இருமடங்காக அதிகரித்து வருகிறது. 


இது சுகாதாரத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி உயர்மட்டக்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று இரவு நடந்தது. இதில் கமிட்டியின் தலைவரும், கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் உள்பட உயர்மட்டக்குழு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி கருத்து தெரிவித்த விவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. 


அதில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளை புதுச்சேரியில் செயல்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டது. கூட்டத்தில் தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகளும் கவர்னரிடம் சுகாதார துறை தெரிவித்துள்ளது. பஸ் போக்குவரத்துக்கு தடை இதற்கிடையே மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இதனால் அந்த மாநிலத்துடனான பஸ் போக்குவரத்துக்கு அண்டை மாநிலமான மத்திய பிரதேச அரசு தடை விதித்து உள்ளது. இந்த தடை நாளை (சனிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுவதாக முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். ஏற்கனவே மராட்டியத்தில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு வரும் பயணிகளை எல்லையோர மாவட்டங்களில் ஒரு வாரம் தனிமைப்படுத்தி வைக்க மத்திய பிரதேச அரசு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது இந்த தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. 


 சிக்கிம் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதை தொடர்ந்து சிக்கிம் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதைப்போல பஞ்சாப்பின் 9 மாவட்டங்களில் ஊரடங்கு நேரம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment