'சிஏ, சிஎஸ், ஐசிடபிள்யுஏ படிப்புகள் முதுநிலைப் படிப்புகளுக்கு இணையானவை' - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 16 March 2021

'சிஏ, சிஎஸ், ஐசிடபிள்யுஏ படிப்புகள் முதுநிலைப் படிப்புகளுக்கு இணையானவை'

'சிஏ, சிஎஸ், ஐசிடபிள்யுஏ படிப்புகள் முதுநிலைப் படிப்புகளுக்கு இணையானவை' 


சிஏ, சிஎஸ், ஐசிடபிள்யுஏ ஆகிய படிப் புகள் இனி முதுநிலைப் படிப்புகளுக்கு இணையானவை என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து இணைச் செயலர் சுரேந்தர் சிங் ஐசிஏஐ அமைப்புக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 


இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு (ஐசிஏஐ), இந்தியக் கம்பெனிச் செயலர்கள் கல்விக் கழகம் (ஐசிஎஸ்ஐ), இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அக்கவுன்ட்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகள் தாங்கள் வழங்கும் சிஏ,சிஎஸ், ஐசிடபிள் யுஏ ஆகிய@ படிப்புகளை முதுநிலைப் படிப்புகளுக்கு இணை யாக கருத வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தன. 


இது குறித்து யுஜிசி சார்பில் நடைபெற்ற 550-ஆவது கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவின் படி சிஏ, சிஎஸ், ஐசிடபிள்யுஏ ஆகிய படிப்புகள் இனி முதுநிலைப் படிப்புகளுக்கு இணையாகக் கருதப்படும்.

No comments:

Post a Comment