அரசின் புதிய கட்டிட விதிகளில் சில அம்சங்கள் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 13 March 2021

அரசின் புதிய கட்டிட விதிகளில் சில அம்சங்கள்

அரசின் புதிய கட்டிட விதிகளில் சில அம்சங்கள் அம்சங்களை இங்கே காணலாம். 


 * கட்டிடங்கள் ஒப்புதல் அளித்த வரைபடத்தின்படி அமைத்துள்ளதை உறுதி செய்யும் வகையில், அஸ்திவாரம் மற்றும் கடைசி தள பணிகளின்போது ஆய்வுகள் மேற் கொள்ளப்படும். 

 * கட்டிட அனுமதிக்கான கால அவகாசம் திட்ட அனுமதிக்கு ஏற்ப ஐந்து ஆண்டுகளாக இருக்கும். அதை மேலும் 3 ஆண்டுகளுக்கு புதுப்பித்துக்கொள்ளலாம். 

 
 * மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோர்களுக்கு ஏற்ற சூழலை அமைக்கவும் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மழை நீர் சேமிப்பு, சூரிய சக்தி, கண்காணிப்பு கேமரா, நீச்சல் குளம் ஆகியவற்றுக்கான விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். 

 
 * குறைவாக உள்ள நில ஆதாரங்களைத் திறம்பட பயன்படுத்தவும், நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் திட்டமிடும் பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டிய நிலையிலும், மாநில நிலப்பயன்பாட்டு கொள்கையை அரசு உருவாக்கி வருகிறது.

No comments:

Post a Comment