குடிமை நீதிபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம் 

குடிமை நீதிபதி பணிக்கு விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. இது குறித்து கர்நாடக உயர்நீதிமன்ற குடிமை நீதிபதிகள் பணி நியமனக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கர்நாடக நீதியியல் சேவைகள் (ஆள்சேர்ப்பு) விதிகள் 2014,(திருத் தம்) விதிகள் 2011 மற்றும் 2015-இன்படி குடிமை நீதிபதிகள் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. www.karnatakajudiciary.kar.nic.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை ஏப். 27-ஆம் தேதி இரவு 11.59 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 


விண்ணப்பங்களின் அடிப்படையில் 94 குடிமை நீதிபதிகள் நேரடியாகப் பணி நியமனம் செய்யப்படு வார்கள். சட்டப்படிப்பில் பட்டம் படித்து, வழக்குரைஞராகப் பதிவு செய்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு 35 வயது, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 38 வயது வரை உச்ச வரம்பு உள்ளது. தகுதியான குடிமை நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்க இரு நிலை தேர்வு நடத்தப்படும். 


இதில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு நேர்காணல் நடக்கும். அதில் தேர்வானால் நீதிபதியாகப் பணி நியமனம் செய்யப்படுவார் கள். பதிவுக்கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.1000, தாழ்த்தப்பட் டோர், பழங்குடியினர் ரூ. 500 செலுத்தவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!