இன்ஜி., பணிகளுக்கு போட்டி தேர்வு - EDUNTZ

Latest

Search Here!

Monday, 1 March 2021

இன்ஜி., பணிகளுக்கு போட்டி தேர்வு

இன்ஜி., பணிகளுக்கு போட்டி தேர்வு 


 இன்ஜினியரிங் சார்நிலை பணிகளுக்கான போட்டி தேர்வு, ஜூன், 6ல் நடத்தப்படுகிறது. இது குறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, இன்ஜினியரிங் சார்நிலை பணிகளுக்கான போட்டி தேர்வு, ஜூன், 6ல் நடத்தப்படும்.இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு மார்ச், 5ல் துவங்கும். 

ஏப்., 4க்குள் தேர்வுக்கு விண்ணப்பித்து விட வேண்டும். இந்த விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில், மார்ச், 5ல் வெளியாகும் அறிவிக்கையில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment