முதுநிலை என்ஜினீயரிங் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 25 March 2021

முதுநிலை என்ஜினீயரிங் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு

முதுநிலை என்ஜினீயரிங் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது 


கொரோனா நோய்த்தொற்று காரணமாக திறக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் மூட அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதன்படி, பொதுத்தேர்வை எழுத இருக்கும் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வாரத்துக்கு 6 நாட்கள் வகுப்புகளை தொடர அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. 


அதன்படி, கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இளநிலை என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏற்கனவே தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அவர்களுக்கு வருகிற 26-ந்தேதியுடன் தேர்வு நிறைவு பெறுகிறது. 



அதேபோல், முதுநிலை என்ஜினீயரிங் மாணவர்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இணைப்பு கல்லூரிகளுக்கும் இதே தேதியில்தான் தேர்வு நடக்கிறது. மேலும், செய்முறைத் தேர்வுகளை வருகிற 31-ந்தேதிக்குள் முடிக்கவும் கூறப்பட்டு இருக்கிறது. அதேபோல் சில பாடப்பிரிவுகளை சேர்ந்த அரியர் மாணவர்களுக்கு தேர்வு தேதிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment