தெரிந்து கொள்வோம் : உலக நுகர்வோர் உரிமைகள் நாள் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 15 March 2021

தெரிந்து கொள்வோம் : உலக நுகர்வோர் உரிமைகள் நாள்

தெரிந்து கொள்வோம் : உலக நுகர்வோர் உரிமைகள் நாள் 


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 15-ந் தேதி, ‘உலக நுகர்வோர் உரிமைகள் நாள்’ கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கிய உரை 1962-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி இடம்பெற்றது. 


அந்த நாளில், அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்க மக்கள் பயன்பெறும் பொருட்டு, இதன் பாதுகாப்புச் சட்டத்தையும் நிறைவேற்றினார். இதையடுத்து 1963-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதம் 15-ந் தேதியை உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆக பிரகடனப்படுத்தி அறிவிக்கப்பட்டது. 


நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் பாதிக்கப்படும் பயனாளிகள் விரைவாக தீர்வு காண, நுகர்வோர் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. 

இதனை மக்கள் தெரிந்துகொள்ளவும், பயன்படுத்திக் கொள்ளவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாடு முழுவதும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. 

 டி.சி. சிவசண்முகம், 
4-ம் வகுப்பு, 
எஸ்.எஸ்.கே.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 
பெரிய காஞ்சிபுரம்.

No comments:

Post a Comment