தேர்தல் கருத்து கணிப்புகளை எப்போது வெளியிடலாம்? இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 26 March 2021

தேர்தல் கருத்து கணிப்புகளை எப்போது வெளியிடலாம்? இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்

தேர்தல் கருத்து கணிப்புகளை எப்போது வெளியிடலாம்? இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் 


தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. 

அதுபோல் சில மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதி, சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வெவ்வேறு கட்டங்களாக வெவ்வேறு நாட்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6-ந் தேதியன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். 


இந்த தேர்தலின்போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் மூலமாக வெளியிடுவதற்கான வரையறைகள் அறிவிக்கப்படுகின்றன. ஒரு பொதுத்தேர்தல் வாக்குப்பதிவின் முடிவுக்கு பின்னும் அரை மணிநேரம் வரை வாக்குப்பதிவு தொடரலாம். 

 அதன்படி, 27-ந் தேதி காலை 7 மணியிலிருந்து ஏப்ரல் 29-ந் தேதி இரவு 7.30 மணி வரை, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக பரப்புவது தடை செய்யப்படுகிறது. 


 ஒவ்வொரு கட்ட தேர்தல்களின் வாக்குப்பதிவும் முடியும் நேரத்திற்கு முன்பு 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக் கணிப்பு அல்லது பிறவாக்குப் பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment