உலக தண்ணீர் தினம் - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 21 March 2021

உலக தண்ணீர் தினம்

உலக தண்ணீர் தினம் 


1993-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா சபை 1993யின் 47-வது கூட்டத்தொடரில் 'உலக தண்ணீர் தினம்' அறிவிக்கப்பட்டது. நீரின் அவசியம் மற்றும் அதனை சேமிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப் பொருளை மையமாகக் கொண்டு உலக தண்ணீர் தினம், மார்ச் 22-ம் தேதியன்று அனுசரிக்கப்படு கிறது. 


அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கருப் பொருள் "நீரின் மதிப்பு'. மேலும், சுத்தமான நீர் கிடைக்காமல் இருக்கும் 2.2 பில்லியன் மக்களின் நிலை குறித்தும், உலகளாவிய நீர் பற்றாக் குறையை சமாளிப்பதற்கான நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் கருப்பொருளின் அங்கமாகக் கொண்டுள்ளது. உலகளவில் 2.5 சதவீதம் மட்டும்தான் சுத்த மான நீர் கிடைக்கிறது. அதிலும் பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகளாக உள்ள, 2.24 சதவீத நீர் மக்களால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மீதமுள்ள தண்ணீரைத்தான் நாம் குடி நீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வருகிறோம். 


இந்தியாவில் ஆண்டுக்கு நான்கா யிரம் பில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் உற் பத்தியாகிறது. இதில் 33 சதவீதம் தான் நமக்கு பயனளிக்கிறது. எஞ்சிய நீர் வீணாக கடலில் கலக்கிறது. சமீபத்தில் நடந்த ஆய்வின்படி உலகில் சுமார் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. 

அந்த பட்டியலில் இந்தியாவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே சில ஆய்வாளர்கள் கூறியதுபோல, 'அடுத்த உலகப் போர் தண்ணீருக்காக தான் நடக்கும்' என்ற அச்சத்தைத் தவிர்க்க தண்ணீரை வீணாக்காமல், சேமித்து வைக்கவேண்டும். முடிந்தவரை சிக்கன மாகப் பயன்படுத்தினால் நாடும் வீடும் வளம் பெறும்.

No comments:

Post a Comment