பள்ளிகளில் கொரோனா விதிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க உத்தரவு - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 17 March 2021

பள்ளிகளில் கொரோனா விதிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க உத்தரவு

பள்ளிகளில் கொரோனா விதிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க உத்தரவு



இது குறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித் துவருகிறது. இதை கருத்தில் கொண்டு சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். 

மாணவர்களும் ஆசிரியர்களும் முகக் கவசம் அணிவதையும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப் பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 

பள்ளிகளில் வகுப்பறைகள் தினமும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப் படுவதை உறுதி செய்ய வேண்டும். 

மாணவர்கள் யாருக்காவது அறிகுறிகள் இருந்தால் அவர்களை வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு அறிகுறி இருந்தால் வேறு யாரு டனும் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment