குவாலிட்டி கண்ட்ரோல் அலுவலர் பயிற்சி! - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 30 March 2021

குவாலிட்டி கண்ட்ரோல் அலுவலர் பயிற்சி!

குவாலிட்டி கண்ட்ரோல் அலுவலர் பயிற்சி! 

இந்திய அரசின் தரச்சான்று வழங்கும் நிறுவனம் பி.ஐ.எஸ். என தப்படும் பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு, இந்திய முழுவதும் அனைத்துப் பொருள்களுக்கும் தரத்தை நிர்ணயிக்கும் பணியைச் செய்து வருகிறது. அதற்கான ஐஎஸ்ஐ தரச்சான்றையும் வழங்குகிறது. இதற்காக நாடு முழுவதும் பல இடங்களில் இதற்கான கிளைகள் உள்ளன. 

பரிசோதனைக் கூடங்கள், பயிற்சி மையங்களும் உள்ளன. புதுதில்லி அருகே உள்ள நொய்டாவில் 'குவாலிட்டி கண்ட்ரோல் அலுவலர்' சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏப்ரல் 2021- அன்று இந்தப் பயிற்சி தொடங்க இருக்கிறது. நான்கு வார காலம் பயிற்சி அளிக்கப்படும். குவாலிட்டி கண்ட்ரோல் தொடர்பான பாடங்கள், விளக்கங்களுடன் கூடவே செய்முறைப் பயிற்சியும் அளிக்கப்படும். 

இந்தச் சான்றிதழ் படிப்பானது நொய்டாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப்ட்ரெயினிங்ஃபார்ஸ்டாண்டர்டி சேஷன் (என்ஐடி எஸ்) வழங்கும் பயிற்சிகளில் ஒன்றாக இருக்கும். நொய்டாவில் மட்டுமல்ல, பிஐஎஸ் ஆல் அங்கீகரிக்கப்பட்ட சோதனைக் கூடங்களிலும் இந்தப் பயிற்சி அளிக்கப்படும். மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், வேதியியல், மைக்ரோ பயோலஜிகல் ஆகிய துறைகளில் இந்தப் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியில் சேர www.manakonline.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

அல்லது பூர்த்தி செய்த விண்ணப்பத்தை rits@bis.gov.in என்ற இணையதளத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். இந்தப் பயிற்சிக்கான கட்டணம் ரூ.10,000 ஜிஎஸ்டி 18 சதவீதம் சேர்த்து ஆன்லைனில் செலுத்த வேண்டும். இப்பயிற்சி தொடர்பான மேலும் விவரங்களை அறிய https://bis.gov.in/wp- content/uploads/2021/02/Brochure=QCP-4Jan2021_revised.pdf என்ற லிங்க்கைக் கிளிக் செய்யுங்கள். தொடர்புக்கு: National Institute of Training for Standardization (NITS) A-20 & 21, Institutional Area, Sector 62, NOIDA-201309 (U.P.) Phone: +91 1204670227/232 Email: : https://bis.gov.in/ www.manakonline.in www.bis.gov.in -எம். ஞானசேகர்


No comments:

Post a Comment