உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்? - EDUNTZ

Latest

Search Here!

Friday, 19 March 2021

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்? 


உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்:இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்? உலகின் மகிழ்ச்சியற்ற முறையில் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ஆவது இடம் பிடித்துள்ளது. உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் சமீபத்தில் வெளியான உலக மகிழ்ச்சி அறிக்கையில் உலக அளவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, சுவீடன், ஜெர்மனி, நோர்வே, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. 


இந்தப் பட்டியலின் இறுதி 3 இடங்களை ஜொர்டான், தான்சானியா மற்றும் ஜிம்பாவே ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியான முறையில் அமையவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியா 4.225 புள்ளிகளுடன் இந்தியா 144 இடத்தினைப் பெற்றுள்ளது. சுகாதாரம், கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment