புதுச்சேரியில் பள்ளிகளை மூட பரிந்துரை - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 18 March 2021

புதுச்சேரியில் பள்ளிகளை மூட பரிந்துரை

புதுச்சேரியில் பள்ளிகளை மூட பரிந்துரை 


புதுச்சேரியில் பள்ளிகளை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை சார்பில் துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதுவையில் நீண்டநாள்களுக்குப் பிறகு கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. புதன்கிழமை புதிதாக 52 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். 


கடந்த இரு மாதங்களுக்கு மேலாக குறைவான எண்ணிக்கையிலேயே பதிவாகி வந்த கரோனா தொற்று, தற்போது 50-ஐ கடந்திருப்பது, மாநிலத்தில் கரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதையே காண்பிக்கிறது. இந்த நிலையில் கரோனா தடுப்பூசி தொடர்பாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. 


கூட்டத்தில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் பல்வேறு பரிந்துரைகளை ஆளுநரிடன் அளித்துள்ளார். அதில், பள்ளிகளை தற்காலிகமாக மூட துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. மேலும் புதுச்சேரி பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பவர்கள், வாக்காளர்கள் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment