பெண்கள் நாட்டின் கண்கள் : டுவிட்டரில் டிரெண்டிங்
சர்வதேச மகளிர் தினமான இன்று (மார்ச் 8) டுவிட்டரில் அது தொடர்பான ஏராளமான ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின்றன.
தாய், சகோதரி, மனைவி, மகள் என நம் உறவு அனைத்திலும் இருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள் என கூறப்படுவது இதனால் தான். நாட்டின் முதுகெலும்பான பெண்களை கவுரவிக்கும் வகையில், பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஐ.நா., சபையால் அறிவிக்கப்பட்ட உலக மகளிர் தினம், ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து, பெண்கள் உரிமையை வென்றெடுத்த நாள் என கருதப்படுகிறது. அந்த உரிமையை வலியுறுத்துவதற்காகவே, ஆண்டுதோறும் மார்ச் 8ல் உலக மகளிர் தினமும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் பெண்கள் தினத்தை முன்னிட்டு இன்று உலகம் முழுக்க தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மகளிர் தினத்தை வைத்து சமூகவலைதளமான டுவிட்டரில் பலரும் பல விதமான ஹேஷ்டாக்குகளை உருவாக்கி வாழ்த்து தெரிவித்து வருவதால் இதுதொடர்பான விஷயம் டிரெண்ட் ஆனது. கிட்டத்தட்ட டாப் 30 டிரெண்டிங்கில் 15 ஹேஷ்டாக்குகள் மகளிர் தினத்தை வைத்து டிரெண்ட் ஆகின்றன. மகளிர் தினம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட சிலரின் கருத்துக்கள்....
* பெண்கள் வலிமையானவர்கள், இதை உலகம் புரிந்து கொள்ள வேண்டிய நேரமிது.
* அன்பிற்குரிய தாய், சகோதரி, அத்தை, பாட்டி, மருமகள், மகள், மனைவி, காதலி. வாழ்க்கையை சுவாசிப்பவர்கள் நீங்கள். உங்களின் எல்லா பங்களிப்பிற்கும் நாங்கள் என்றென்றும் கடன்பட்டு உள்ளோம்.
* பெண்கள் தினம் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்று மட்டும் உங்களை கொண்டாட வேண்டாம், எல்லா நாளிலும் கொண்டாடுங்கள். உங்களின் கனவுகளை துரத்துங்கள், அந்த வாழ்க்கையை வாழுங்கள். யாரையும் உங்கள் வழியில் குறுக்கே நிற்க விடாதீர்கள்.
* சர்வதேச பெண்கள் தினமான இன்று அவர்களின் உரிமைகளுக்காக போராடும் அனைத்து பெண்களுக்கும் வணக்கம் செலுத்துகிறோம்.
* உலகம் முழுக்க உள்ள அனைத்து தனித்துவமான, வலுவான, எழுச்சியூட்டும் பெண்களுக்கு இனிய சர்வதேசமகளிர் தினம் வாழ்த்துக்கள்.
* அவள்(Her) இல்லை என்றால் அவன் (Her 'o') கிடையாது, ஜீரோ தான்.
MOST READ WANTED | Associate Professors | Assistant Professors | Soft Skill Trainer | Lab Instructors | Driver
* பெண்கள் இந்த நாட்டின் கண்கள். அந்த கண்களை இமை போல் காப்போம். பெண்களை பாதுகாப்போம், மதிப்போம், சமமாக நடத்துவோம்.
* பெண்கள் தான் இந்த உலகத்திற்கு மிகப்பெரிய உத்வேகம். சர்வதேச மகளிர் தினத்தில் அவர்களை அரவணைப்போம், மதிப்போம். நமது ஒவ்வொரு முயற்சியிலும் அவர்கள் எப்படி ஆதரிக்கிறார்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
* பெண்கள் தினத்தை ஒரு நாள் மட்டும் கொண்டாடுவது ஆச்சர்யம் கிடையாது. ஒவ்வொரு நாளும் அவர்களை கொண்டாட வேண்டும்.
* கடினமான சூழ்நிலைகளில் ஒருவருக்கொருவர் துணை நிற்போம். பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க ஆதரவளிப்போம். பெண்களை சுரண்டுவதற்கு எதிராக போராடுவோம். சத்தியத்தின் அருகே நிற்போம். பெண்கள் தின வாழ்த்துக்கள்.
* ஒவ்வொருவரின் வீட்டிலும், இதயத்திலும், உணர்விலும், மகிழ்ச்சியிலும், ஒவ்வொரு நொடியிலும் நீங்கள் இல்லாமல் வாழ்க்கை முழுமை அடையாது. மனஉறுதியான அனைத்து பெண்களுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்.
* ஒரு நாள் மட்டுமல்ல, எங்களின் ஒவ்வொரு நாளிலும் எங்கள் வாழ்க்கையில் கடந்து போகும் மகளாக, சகோதரியாக, தாயாக, மனைவியாக, பெண் தோழியாக பயணிக்கும் உங்களுக்கு இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்.
இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களை டுவிட்டரில் #InternationalWomensDay, #womenpower, #womenempowerment, #IWD2021, #8March, #RespectWomen என பல ஹேஷ்டாக்குகளில் பதிவிட்டு வருகின்றனர்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கல்வி, மருத்துவம், அறிவியல், விளையாட்டு, கலை என பல துறைகளில் சாதனை படைத்த முதல் பெண்களை நினைவுகூறும் விதமாக இந்த டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகில் குடும்ப பந்தம், பாசம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, ஈகை உள்ளிட்ட, சகலத்திற்கும் ஆதாரமாக விளங்கும் பெண்களை, மதிப்போம், போற்றுவோம், வணங்குவோம். அனைவருக்கும் தினமலரின் மகளிர் தின வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment