தெரிந்து கொள்வோம் : மனித எலும்பு குகை - EDUNTZ

Latest

Search Here!

Monday, 15 March 2021

தெரிந்து கொள்வோம் : மனித எலும்பு குகை

தெரிந்து கொள்வோம் : மனித எலும்பு குகை 


மனித எலும்புகளை கொண்டு ஒரு கலை படைப்பை உருவாக்க முடியுமா என்று கேட்டால் பலரும் முடியாது என்பார்கள். ஆனால், பிரான்ஸ் நாட்டினரோ முடியும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் நடத்தியும் காட்டியிருக்கிறார்கள். பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நகரின் நிலத்துக்கு அடியில் ஏராளமான சுண்ணாம்பு குகைகள் உள்ளன. 


இவை அனைத்தும் இயற்கையாக உருவானவை. இவற்றின் மொத்த நீளம் 300 கி.மீ. இந்தக் குகைகள் எந்த உபயோகமும் இல்லாமல் வெறுமனே இருந்தது. 300 ஆண்டுகளுக்கு முன் பிரான்சில் பஞ்சமும், தோற்று நோய்களும் பரவ தொடங்கின. இதில் ஏராளமான மனிதர்கள் இறந்து போனார்கள். 

இறந்த மனிதர்களை புதைக்க பாரீஸ் நகர கல்லறைகளில் இடம் இல்லை. இடப்பற்றாக்குறையால் உடல்கள் சரியாக புதைக்கப்படவில்லை. உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அதன் மூலமும் நோய்கள் பரவின. இதனைக் கண்ட அன்றைய மன்னர் உடல்களை பூமிக்கடியில் இருக்கும் சுண்ணாம்பு குகைக்குள் வைக்க சொன்னார். அன்று முதல் இறந்தவர்களை கல்லறைகளில் புதைப்பதில்லை. 


அவர்களின் உடலை சுண்ணம்பு குகைக்குள் வைத்து விடுவார்கள். இந்தப் பழக்கம் 300 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்தது. 1814-ம் ஆண்டு நகரின் மற்ற கல்லறைகளில் இருந்த உடல்களையும், எலும்புகளையும் எடுத்து இங்கு கொண்டு வந்து சேர்த்தனர். 

இந்த எலும்புகள், மண்டை ஓடுகள் ஆகிய அனைத்தையும் கொண்டு ஒரு அட்டகாசமான கலை படைப்பை உருவாக்கிவிட்டனர். அந்த இடத்திற்கு ‘கேட்டகோம்பஸ் ஆப் பாரீஸ்' என்று பெயரிட்டனர். 

மனித எலும்புகளால் ஆன சுவரை உருவாக்கினார்கள். துணிவு மிக்கவர்கள் மட்டும் இந்த குகைக்கு சென்று அடுக்கி வைக்கப்பட்ட எலும்புக்கூடுகளை பார்த்து வந்தார்கள். இப்படி அடுக்கி வைக்கப்பட்ட எலும்புக்கூடுகளை மேலும் கலைநயம் மிக்க படைப்பாக மாற்ற வேண்டும் என்று நினைத்தார்கள். 


அதற்காக 1995-ல் இந்தக் குகையை மூடினார்கள். 10 வருடங்கள் குகைக்குள் எலும்புக்கூடுகளையும், மண்டைஓடுகளையும் கொண்டு கட்டுமான பணிகள் நடந்தன. 2005 ஜூன் 14-ந் தேதி மீண்டும் குகை திறக்கப்பட்டது. 

நிலத்தின் அடியில் 130 படிகள் இறங்கிப்போனால் பூமியிலிருந்து 60 அடி ஆழத்தில் இந்த குகை இருக்கிறது. 2 கி.மீ. நீளம் கொண்ட இந்தக் குகையில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட மனிதர்களின் எலும்புக்கூடுகள் கலைநயத்தோடு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மனதில் துணிவு இருப்பவர்கள் இந்த குகையை பார்த்துவந்து ஆகா ஓஹோ என்று புகழ்கிறார்கள். 

அதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது. காலை 10 மணியிலிருந்து இரவு 8.30 வரை பார்வையாளர்களை அனுமதிக்கிறார்கள். அதிகமான நுழைவுக்கட்டணம் கொடுத்து இரவில் இந்த குகைக்குள் எலும்புக்கூடுகளுக்கு நடுவே படுத்து தூங்க துணிவிருந்தால் தாராளமாக தூங்கலாம். 45 நிமிடம் நீடிக்கும் இந்தச் சுற்றுலா ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். 2 மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் டிக்கெட் வாங்கினாலும் 2 மணி நேரம் உள்ளே செல்வதற்கு காத்திருக்க வேண்டும்.

No comments:

Post a Comment