வேலை வாய்ப்புக்கான கலங்கரை விளக்கங்கள் - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 16 March 2021

வேலை வாய்ப்புக்கான கலங்கரை விளக்கங்கள்

வேலை வாய்ப்புக்கான கலங்கரை விளக்கங்கள்

வேலை வாய்ப்பு தொடர்பான தகவல்கள் நாளிதழ்களில் வெளியிடப்படுகின்றன. சமூக வலைதளங் களில் அவற்றைப் பகிர்பவர்களின் எண் ணிக்கையும் அதிகமாக உள்ளது. மத்திய அரசு வேலை வாய்ப்பு, மாநில அரசு வேலை வாய்ப்பு போன்ற வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. 

இன்னும் ஒருபடி மேலே போய் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் களும் வழங்கப்படுகின்றன. சிலருக்கு காவல்துறையில் வேலை செய்வது கனவாக இருக்கும். சிலருக்கோ ராணுவத்தில். சிலர் வங்கிப் பணி செய்ய விரும்புவார்கள். எந்த வேலையாக இருந் தாலும் சரி, அது அரசு வேலையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் உள்ளனர். இவ்வாறு பல்வேறு துறைசார்ந்த வேலைவாய்ப்புகளைப் பற்றிய தகவல்கள், அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப் படுகின்றன. 


வேலை வாய்ப் புகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ' எம்ப்ளாய் மென்ட் நியூஸ்" போன்ற இதழ்க ளும் வெளியிடப் படுகின்றன. மாநில மொழிகளிலும் வேலை வாய்ப் புச் செய்திக்கென இதழ்கள் உள் என. இவ்வளவு இருந்தும், உரிய நேரத்தில் உரிய வேலைக்கான விண்ணப் பங்களை அனுப்ப முடியாமல் வாய்ப்பு களைத் தவறவிட்டவர்கள் அதிகம். இதற்கு என்ன காரணம்? எல்லாத் தகவல்களும் எல்லாருடைய கண்களிலும் படுவதில்லை வாய்ப்புத் தகவலைத் தெரிந்து கொண்ட ஒருவர், அதைப் பற்றி பிறரிடம் பேசுவ தில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வது? வலைதளங்கள் பல்கிப் பெருகி யுள்ள இன்றையச் சூழ்நிலையில், என்ன வேலைக்கு எந்த வலைதளத்தைப் பார்க்க வேண்டும் என்பதை இளைஞர்கள் அனை வரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 


வேலைவாய்ப்புக்கான வலைதளங்களை ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது சிறிது நேரம் ஒதுக்கி பார்க்கும் பழக்கத்தை இளை ஞர்கள் ஏற்படுத்திக் கொண்டால், வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் முடியும் அப்படித் தெரிந்துகொணஙட தகவல்களை வேலை வாய்ப்பு கிட்டாமல் தவித்துக் கொண்டி ருக்கும் பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும் முடியும். 

நாம் சில வேலைவாய்ப்பு தொடர்பான, போட்டித் தேர்வுகள் தொடர்பான வலை தள முகவரிகளை இப்போது பார்ப்போம். 

1. https://www.tnpsc.gov.in/ (தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் ஆணைய வலைதளம்) 

2. https://www.dailyrecruitment.in/tamilnadu-ps c-jobs/ 

3. http://www.tamilanguide.in/ 

4. https://tnvelaivaaippu.gov.in/ 

5. https://www.freshers.live.com/search-jobs/ chennai 

6.https://entri.app/blog/best-app-for-tnps c-group-2-preparation/ 

(தமிழ்நாடு அரசுப் பணிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் வலைதளங்கள்) 
7. https://ssc.nic.in/ (மத்திய அர சின் ஸ்டாப் செலக் ஷன் கமி ஷடனின் EMPLOIRENT இணையதளம்) OFFICE 

8. https://www.i bps.in/ (அரசு வங் கிகளில் உள்ள வேலை வாய்ப் புகளை இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ள முடி யும். 

9. https://ric) b.gov.in/ (ரயில்வேதுறையில் பணியாற்ற விரும்புப் வர்கள் பார்க்க வேண்டிய வலைதளம்) 

10. https://dot.gov.in/ (தகவல் தொழில் நுட்பம், டெலி கம்யூனிகேஷன் துறையில் உள்ள வேலை வாய்ப்புகளைத் தெரிந்து கொள்ள உதவும் வலைதளம்) 

11. http://dgms.gov.in/ (சுரங்கத்துறையில் உள்ள வேலைவாய்ப்பு களை இந்த இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்) 

12. www.eduntz.com (கல்வி மற்றும் வேலை வாய்ப்புச் செய்திகள்)

13.https://fci.gov.in/ (உணவு கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகளுக்கான வலைதளம்) 



இவற்றைப் போன்ற வேலைவாய்ப்புக ளைப் பற்றி வெளிச்சம் பாய்ச்சுகிற ஏராள மான பலவலைதளக் கலங்கரை விளக்கங்கள் நிறைய உள்ளன. இளம் தலைமுறையினர் அவற்றைக் கண்டறிந்தால் வேலைவாய்ப்புக் கான வழிகள் கண்களில் தென்படும்.

No comments:

Post a Comment