சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு நடத்தப்பட்ட முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு பயிற்சி - EDUNTZ

Latest

Search Here!

Friday, 26 March 2021

சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு நடத்தப்பட்ட முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு பயிற்சி

சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு நடத்தப்பட்ட முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு பயிற்சி தமிழக அரசின் அண்ணா மேலாண்மை நிலையம் வழங்குகிறது 


சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு நடத்தப்பட்ட முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கான பயிற்சியை தமிழக அரசின் அண்ணா மேலாண்மை நிலையம் வழங்குகிறது. 

முதன்மை தேர்வில் 19 பேர் வெற்றி இதுதொடர்பாக அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குனரும், கூடுதல் தலைமை செயலாளருமான வெ.இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

 தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப்பணிகள் பயிற்சி மையத்தில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப்பணிகளில் அடங்கிய முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை-எளிய தேர்வர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. 


 இந்த பயிற்சி மையத்தில் 2020-21-ம் ஆண்டில் முதன்மை தேர்வுக்கான பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டது. அதன்படி, பயிற்சி பெற்ற 86 பேரில், 19 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 9 பேர் பெண்கள் ஆவார்கள். மேலும் 8 பேர் தமிழை விருப்பப்பாடமாக தேர்வு செய்து தேர்ச்சி பெற்றுள்ளனர். நேர்முகத் தேர்வுக்கு பயிற்சி பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்றுள்ள இந்த தேர்வர்களுக்கு நேர்முகத் தேர்வு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. 

பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற அகில இந்திய குடிமைப்பணி அலுவலர்களாலும், தலைசிறந்த வல்லுநர்களாலும் இந்த பயிற்சி நடத்தப்பட உள்ளது. இவர்களை தவிர, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பிற தேர்வர்களும், இந்த மையத்தால் நடத்தப்பட உள்ள நேர்முகத் தேர்வு பயிற்சியில் பங்கு பெற அனுமதிக்கப்படுவார்கள். அதில் பங்கேற்க விரும்புபவர்கள், தங்களுடைய விருப்பத்தினை aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9444286657 என்ற செல்போன் எண்ணிற்கோ (வாட்ஸ்-அப்) அல்லது 044-24621909 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம். 


நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி நடத்தப்படும் தேதி குறித்த விவரங்கள் www.civilservicecoaching.com என்ற பயிற்சி மையத்தின் இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். மேலும் இந்த மையத்தில் படித்து நேர்முகத் தேர்வுக்கு டெல்லி செல்லும் தேர்வர்களுக்கு பயண செலவு தொகையாக ரூ.2 ஆயிரம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment