'அகரம்' அறக்கட்டளையால் உயர்ந்த பெண்ணைக் கண்டு நெகிழ்ந்த நடிகர் கார்த்தி! - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 20 March 2021

'அகரம்' அறக்கட்டளையால் உயர்ந்த பெண்ணைக் கண்டு நெகிழ்ந்த நடிகர் கார்த்தி!

'அகரம்' அறக்கட்டளையால் உயர்ந்த பெண்ணைக் கண்டு நெகிழ்ந்த நடிகர் கார்த்தி! 


நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் உதவியால் படித்த மாணவி ஒருவர், தாம் பணியாற்றும் இடத்தில் நடந்த விழாவில் சூர்யாவின் தம்பி கார்த்தியை வரவேற்ற நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

2012 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற கோவை மாணவி ஒருவர் தீ விபத்தில் சிக்கி, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தொடர்ந்து படிக்க விரும்பியதை அறிந்த நடிகர் சூர்யா, தீக்காயங்களிலிருந்து ஓரளவு மீண்ட பின், அகரம் அறக்கட்டளை மூலம் சென்னையில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருச்சியில் ஒரு தனியார் கல்லூரியிலும் பொறியியல் படிக்க வைத்துள்ளார். 

தற்போது அந்தப் பெண், தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே பணியாற்றுகிறார். அந்த மருத்துவமனையில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தி பங்கேற்றார். அவரை அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பெற்ற பெண் வரவேற்றார். தங்கள் அறக்கட்டளை மூலம் உயர்ந்த அந்த பெண்ணை கார்த்தி நெகிழ்ந்துபோய் பாராட்டினார்.

PLEASE USE DOWNLOAD BUTTON TO WATCH VIDEO




You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment