இம்யூனிட்டிக்கு உதவும் மஞ்சள்: பயன்படுத்துவது எப்படி? - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 27 March 2021

இம்யூனிட்டிக்கு உதவும் மஞ்சள்: பயன்படுத்துவது எப்படி?

இம்யூனிட்டிக்கு உதவும் மஞ்சள்: பயன்படுத்துவது எப்படி? 




சில காலமாகவே மஞ்சளை உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று கூறப்பட்டு வருகிறது. மேற்கத்திய நாடுகளில் தற்போதுதான் மஞ்சளின் மகத்துவத்தை அறிந்துள்ளனர். 


ஆனால் இந்தியாவில் 100 ஆண்டுகளாகவே மஞ்சளை உணவுப்பொருளாகவும் மருந்தாகவும் பயன்படுத்தி வருகின்றனர். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் மஞ்சள் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் வீடுகளில் சமைக்க கூடிய பெரும்பாலான உணவுகளில் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. இது உணவிற்கு சுவையையும் உடலுக்கு ஊட்டச்சத்தையும் அளிக்கிறது. 

மஞ்சள் தூளை பால் அல்லது சூடான நீருடன் சேர்த்து பருகும்போது காய்ச்சல் இருமல் மற்றும் சளியை குணப்படுத்தும். மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். 


மேலும் மஞ்சளிலுள்ள கர்குமின் அழற்சி நீக்கியாகவும் பயன்படுகிறது என்று பப்ளிக் லைப்ரரி ஆப் சயின்ஸ் அறிக்கை கூறுகிறது. மஞ்சளானது வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்ஞைகளுக்கு எதிர் பொருளாக செயல்படுவது மட்டுமின்றி, நன்மை செய்யும் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. பீட்டா கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், கால்சியம், பைபர், இரும்பு, நியாசின், பொட்டாசியம், ஜிங்க் போன்ற 300க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்களை மஞ்சள் தன்னகத்தே கொண்டு சக்தி வாய்ந்த மூலிகையாக திகழ்கிறது. 

தற்போது அறிவியலாளர்கள் கண்டறிந்த மஞ்சளிலுள்ள கர்குமின் பலனை, நம் முன்னோர்கள் மஞ்சளையும் மிளகையும் உணவில் சேர்த்து, முன்பே பயன்படுத்தி வந்துள்ளனர் என்று ஊட்டச்சத்து நிபுணர் நிகில் சௌத்ரி கூறுகிறார். மஞ்சளை ஒரு ஸ்பூன் நெய்யுடன் கொதிக்க வைத்து தினமும் காலையில் பருக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு வறட்டு இருமலும் நீங்கும். 

மஞ்சள் தூளை பால் அல்லது சூடான நீருடன் சேர்த்து பருகும்போது காய்ச்சல் இருமல் மற்றும் சளியை குணப்படுத்தும். மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். இதனை பெரும்பாலான வீடுகளில் வீட்டு வைத்தியமாக செய்து வருகின்றனர். 

மேலும் மஞ்சளிலுள்ள கர்குமின் மற்றும் பிற உயிர் மூலக்கூறுகள் பல்வேறு நோய்களை குணபடுத்தக்கூடிய எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளிக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சுவாச பிரச்சனைகளை தீர்க்கிறது. என்று சீனியர் டயட்டீசியன் திவ்யா கூறுகிறார். 

 மேலும் மஞ்சளானது, செரிமானத்தை சீராக்கி குடல் சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்கிறது. சரும பிரச்சனைகள் மற்றும் காயங்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இரத்ததிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்குவதோடு, இரத்த சர்க்கரை அளவையும் சீராக்குகிறது.

No comments:

Post a Comment