நகை கடன், சுய உதவி கடன் தள்ளுபடியாவது எப்போது? - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 9 March 2021

நகை கடன், சுய உதவி கடன் தள்ளுபடியாவது எப்போது?

நகை கடன், சுய உதவி கடன் தள்ளுபடியாவது எப்போது? 


 'நகைக் கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள், எப்போது தள்ளுபடி செய்யப்படும்?' எனக் கேட்டு, வாடிக்கையாளர்கள், கூட்டுறவு வங்கிகளுக்கு படையெடுப்பதால், வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பயிர் கடன், நகைக் கடன் உள்ளிட்ட கடன்களை வழங்குகின்றன.

கூட்டுறவு வங்கிகளில், 16.43 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கிய பயிர் கடன் நிலுவை தொகையான, 12 ஆயிரத்து, 110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, முதல்வர் இ.பி.எஸ்., பிப்., 5ல் அறிவித்தார். தொடர்ந்து, அதற்கான அரசாணை வெளியான நிலையில், பயிர் கடன் தள்ளுபடிக்கான சான்று, விவசாயிகளிடம் வழங்கப்பட்டு வருகிறது. 

 மேலும், கூட்டுறவு வங்கிகளில், 6 சவரன் வரை, அடகு வைத்துப் பெற்ற நகை கடன்களையும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்வதாக, முதல்வர், பிப்., 26ல், சட்டசபையில் அறிவித்தார்.அன்று மாலை, தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. உடனே, நடத்தை விதி அமலுக்கு வந்தது. 

இதனால், நகை மற்றும் மகளிர் குழுக்களுக்கு வழங்கிய கடன் தள்ளுபடிக்கான அரசாணை, இதுவரை வெளியிடப்படாமல் உள்ளது.நகை கடன் வைத்தவர்கள், தங்களின் நகைகளை திரும்ப வழங்க கோரியும்; மகளிர் குழு பெண்கள், கடன் தள்ளுபடி சான்று கேட்டும், கூட்டுறவு வங்கிகளுக்கு படையெடுத்தபடி உள்ளனர்.

 அவர்களுக்கு விளக்கம் அளிக்க முடியாமல், அதிகாரிகள் சிரமப்படுகின்றனர். இதனால், வங்கிகளில், வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், '

நகைக் கடன் மற்றும் மகளிர் குழு கடன் தள்ளுபடி செய்வதற்கு, பல நடைமுறைகள் பின்பற்ற வேண்டியுள்ளது. 'தற்போது, 2021 ஜன., வரை வழங்கப்பட்ட கடன் நிலுவை விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த பணி முடிந்ததும், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

No comments:

Post a Comment