வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனிக்க வேண்டியவை
பெண்கள் எப்போதும் தங்கள் பாதகாப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக, வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள்
மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.
ஏனெனில், பெண்களுக்கு எதிரான பெரும்பாலான
குற்றங்கள், வீட்டில் தனியாக இருக்கும் பெண்
களையே அதிகம் குறிவைக்கின்றன.
தனிமையில் இருப்பது அமைதியையும், ஆனந்தத்
தையும் தரும் என்றாலும், அதில் ஆபத்தும் உள்ளது
என்பதை முதலில் உணர வேண்டும். எனவே,
தன்னை மறந்து தொலைக்காட்சி மற்றும் சமூக
வலைத்தளங்களில் மூழ்கி இருப்பதைத் தவிர்க்க
வேண்டும்.
MOST READ மின்கம்பத்தில் ஏறி ‘கேங்மேன்' வேலை பார்க்கும் இளம்பெண் !!! கணவர் தந்த ஊக்கமே காரணம் என்கிறார்
வீட்டில் தனியாக உள்ள
பெண்களுக்கு
மிகப்
பெரிய எதிரி பயம்தான்.
எந்த சூழ்நிலையையும்
பயமில்லாமல் தைரியத்
தோடு எதிர்கொள்ள
வேண்டும்.
இன்றைய வாழ்க்கைச்
சூழ்நிலையில், பலருக்கும்
தங்கள் அருகில் வசிப்
பவர்களைப் பற்றி அறிந்து
கொள்ள நேரமும், விருப்ப
இருப்பதில்லை.
வீட்டில் தனியாக இருக்கும்
பெண்கள், கட்டாயம் தங்களது அண்டை வீட்டாரு
டன் அறிமுகம் ஆகிக் கொள்ள வேண்டும்.
ஏதேனும் ஆபத்து ஏற்படும் போது, அக்கம் பக்கம்
உள்ளவர்கள் உடனடியாக உதவிக்கு வருவார்கள்.
அறிமுகம் இல்லாதவர்களுக்கு வீட்டு முகவரியை
கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் ஒரு
அப்பார்ட்மெண்டில் வசிக்கிறீர்கள் என்றால், இணை
யத்தில் பொருட்கள் ஆர்டர் செய்யும் போது,
உங்கள் கதவு எண்ணுக்கு பதிலாக அப்பார்ட்
மெண்ட் எண்ணை மட்டும் கொடுக்கலாம். டெலிவரி
செய்பவர்களை அப்பார்ட்மெண்ட் வாசலுக்கு வந்து, உங்களைத் தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்த
லாம்.
அப்பார்ட்மெண்ட் வாசலில் உள்ள பாது
காவலர் பகுதியில் நீங்கள் அவற்றைப் பெற்றுக்
கொள்ளலாம்.
பெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு,
ஏராளமான பாதுகாப்பு செயலிகள் இணையத்தில்
இருக்கின்றன. உங்கள் அலைபேசியில் அவற்றை
தரவிறக்கம் செய்து, பயன்பாட்டில் வைத்துக்
கொள்வது நல்லது.
அவசர அலாரங்களை அமைத்
தல், ஆடியோ பதிவுகளை அனுப்புதல், ஒரே நேரத்
தில் பல அவசர எண்களுக்குச் செய்திகளை அனுப்பு
தல், ஜி.பி.எஸ் இருப்பிடங்களை அனுப்புதல் போன்ற
செயலிகளை தரவிறக்கம்
செய்து பயன்பாட்டில்
வைத்துக்கொள்ள வேண்
டும்.
நம்முடைய பாதுகாப்
பிற்குத் தொழில்நுட்ப
வசதிகளை பயன்படுத்திக்
கொள்ள வேண்டும்.
ஸ்மார்ட்போன் வழியா
கவே வீட்டில் உள்ள மின்
விளக்குகளை
வைக்கும் வசதி, பாது
காப்பு உபகரணங்களைச்
செயல்பட வைக்கும்
வசதி போன்றவை தற்
போது பயன்பாட்டில் உள்ளன. அறிமுகம் இல்லாத
வர் வீட்டிற்குள் நுழைவது போன்ற ஆபத்தை நீங்கள்
உணரும்போது, ஒரு அறையிலிருந்தே மற்ற அறை
களின் மின் விளக்குகளை எரிய விடுதல், தொலைக்
காட்சியை செயல்பட வைத்தல் போன்றவைகளைச்
செய்யலாம்.
இதனால் வீட்டுக்குள் நுழைய முற்படும் நபர்
களுக்கு, நீங்கள் வீட்டில் தனியாக இல்லை,
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் உள்ளனர் எனும்
எச்சரிக்கையை கொடுக்கலாம். இதன் மூலம்
ஆபத்துகளைத் தவிர்க்க முடியும்.
எரிய
No comments:
Post a Comment