ஊக்க ஊதிய உயர்வு தகுதி பெற்ற ஆசிரியர் பட்டியல் அனுப்ப வேண்டும் தொழில்நுட்ப கல்வித்துறை உத்தரவு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 25 March 2021

ஊக்க ஊதிய உயர்வு தகுதி பெற்ற ஆசிரியர் பட்டியல் அனுப்ப வேண்டும் தொழில்நுட்ப கல்வித்துறை உத்தரவு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஊக்க ஊதிய உயர்வு தகுதி பெற்ற ஆசிரியர் பட்டியல் அனுப்ப வேண்டும் தொழில்நுட்ப கல்வித்துறை உத்தரவு 


பாலிடெக்னிக் கல்லூரிகளில் கூடுதல் கல்வித்தகுதியுடன், ஊக்க ஊதிய உயர்வு பெறாமல் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பி வைக்க தொழில்நுட்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து அனைத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி யிருப்பதாவது: 


ஆசிரியர்கள் கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக வெளியிடப்பட்ட அரசாணையில் 'கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 10ம் தேதிக்கு முன்னதாக கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு மட்டும் நிதித்துறை ஒப்புதலின் அடிப்படையில் ஊக்க ஊதியம் உயர்வுக்கு அனுமதி வழங்கலாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து 2020ம் ஆண்டு மார்ச் 10ம் தேதிக்கு முன்புதங்கள் கல்லூரிகளில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், எம்பில், பிஎச்டி போன்ற கூடுதல் கல்வித்தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாமல் இருந்தால், அவர்களது விவரங்களை இயக்குனரகத் துக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும். 


ஆசிரியர் களின் விவர அறிக்கையை அனுப்பும் போது, கல்லூரி முதல்வர்கள் அவற்றை நன்கு கூர்ந் தாய்வு செய்து, சான்றிதழின் உண்மை தன்மையை உறுதி செய்து உடன் சேர்த்து அனுப்ப வேண்டும். இதில் எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment