நாளை 'டான்செட்' நுழைவுத்தேர்வு - EDUNTZ

Latest

Search here!

Friday, 19 March 2021

நாளை 'டான்செட்' நுழைவுத்தேர்வு

நாளை 'டான்செட்' நுழைவுத்தேர்வு: 

'டான்செட்' நுழைவுத்தேர்வுக்காக, கோவையில் 5 மையங்களில் 4,720 பேர் தேர்வெழுதவுள்ளனர்.எம்.இ., எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, டான்செட் நுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே @மேற்கொள்ளப்படும்.மாநில அளவில் இத்தேர்வுகள், வரும் நாளை மற்றும் மறுதினம் நடக்கவுள்ளன. 


கோவையில், தடாகம் ரோடு அரசு தொழில்நுட்ப கல்லுாரி, நவாவூர் பிரிவு அண்ணா பல்கலை மண்டல வளாகம், பீளமேடு பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி, நீலாம்பூர் பி.எஸ்.ஜி கல்லுாரி, அவிநாசி ரோடு சி.ஐ.டி., கல்லுாரி ஆகிய ஐந்து மையங்களில், இத்தேர்வுகள் நடைபெறவுள்ளன.


அரசு தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் தாமரை கூறுகையில், ''கோவையில், எம்.சி.ஏ., பிரிவில், 535 பேரும், எம்.பி.ஏ., 2,984 பேரும், எம்.இ., எம்.டெக்., 1,201 பேர் உட்பட, 4,720 பேரும் பங்கேற்க உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாகஒரு அறைக்கு அதிகபட்சம், 25 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 


அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன,'' என்றார்.தேர்வு 

அட்டவணை பட்டியல்

எம்.சி.ஏ., - 20ம் தேதி காலை, 10:00 முதல் 12:00 மணி வரைஎம்

.பி.ஏ., - 20ம் தேதி மதியம் 2:30 முதல் 4:30 மணி வரை

எம்.இ., எம்.டெக்., - 21ம் தேதி காலை, 10:00 முதல் 12:00 மணி வரை

No comments:

Post a Comment