SCERT - பாட வல்லுநர் (BEST TEACHER) தொகுப்பு உருவாக்குதல் - ஆசிரியர்கள் விவரங்களை அனுப்பிவைக்கக் கோருதல் - Proceedings
அனுப்புநர்
இணை இயக்குநர் (பாடத்திட்டம்),மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்,சென்னை.06.
பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
ந.க.எண்.604/D2/2017, நாள். 03.2021,
பொருள்:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - பாட வல்லுநர் தொகுப்பு உருவாக்குதல் - ஆசிரியர்கள் விவரங்களை அனுப்பிவைக்கக் கோருதல்-சார்பு.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், மாநில அளவில் பாட
வல்லுநர்கள் தொகுப்பானது பாடவாரியாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,
9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்துப்
பாட ஆசிரியர்களுள் ஒரு வகுப்பிற்கு ஒரு பாடத்திற்கு 3 ஆசிரியர்கள் வீதம் பாட வல்லுநர்களைத்
தேர்ந்தெடுத்து அவர்கள் பற்றிய விவரங்களைக் கீழ்கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து 11.03.2021-
க்குள் மின்னஞ்சல் முகவரி (tnscertjd2@gmail.com) மூலம் அனுப்பும்படி அனைத்து முதன்மைக்
கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பாட வல்லுநர்கள் ஒரு பாடத்திற்கு 3
பேருக்குக் குறைவாக இருந்தால், எத்தனை பேர் உள்ளார்களோ அவர்களது விவரம் மட்டும்
அளித்தால் போதுமானது. பாட வல்லுநர்கள் 3 பேருக்கு மேல் இருந்தால் அனைவரது
விவரங்களையும் அளிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஒப்பம்.
செ.சாந்தி
இணை இயக்குநர்
(பாடத்திட்டம்)
Download Timer
No comments:
Post a Comment