TNOU - இணைய வழி வகுப்புகள் நடைபெறும் தேதி மாற்றம் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 12 March 2021

TNOU - இணைய வழி வகுப்புகள் நடைபெறும் தேதி மாற்றம்

TNOU - இணைய வழி வகுப்புகள் நடைபெறும் தேதி மாற்றம்

அன்பான மாணவர்களே! வணக்கங்களும் வாழ்த்துக்களும். பல்கலைக்கழக மாண்புமிகு துணைவேந்தர் அவர்களின் மார்ச் 3, 2021 தேதியிட்ட கடிதத்தின் தொடர்ச்சியாக மார்ச் 13, 2021 அன்று இணையவழி பாட வகுப்புகள் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தமிழ் நாட்டின் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான பயிற்சி வகுப்பு மார்ச் 13, 2021 அன்று நடைபெற உள்ளது. அதில் இணைய வழி வகுப்பினை நடத்தும் பேராசிரியர்களில் சிலரும் மற்றும் நமது மாணவர்களில் சிலரும் பொது தேர்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதால் இணைய வழி வகுப்புகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை நிலவுகின்றது. மேலும் சில மாணவர்களுக்கு உயர்தரமுள்ள பாட புத்தகங்கள் சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது இணையவழி பாட வகுப்புகள் வருகின்ற மார்ச் 20, 2021 ஆம் தேதியன்று துவங்கும் என்று அன்போடு கூறிக்கொள்கின்றேன். எனவே, மாணவர்கள் அனைவரும் பாட வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொர்கிறேன். பாடத்திட்டங்களின் அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் கூடிய விரைவில் காணலாம். 

Dear Students, Greetings, In continuation of the earlier letter from Hon'ble Vice Chancellor dated 3rd March, 2021, originally we have planned to organise the Online Counselling classes for the first year students, commencing from 13th March, 2021. But now due to the General Election Training classes for some of our Resource Persons and students, as well as some of the students are yet to receive the lesson materials, the counselling classes will begin from 20th March, 2021. I request all the students to attend the classes and get benefitted. The class schedule will be available in the University Website shortly. 


No comments:

Post a Comment