1 முதல் 9ம் வகுப்பு வரை
வீட்டில் திறனறிதல் தேர்வு
சென்னை, ஏப். 19-
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு, வீட்டில் வைத்து தேர்வு நடத்த,
பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நாடு முழுதும் கொரோனா பரவல் அதிகரித்து
வருகிறது. அதனால், பல்வேறு மாநிலங்களில் ஊர
டங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன.
MOST READ WANTED LECTURER | LAB ASSISTANTS | LIBRARIAN | DRIVER | SECURITY | FARM WORK | PHYSICAL DIRECTOR
தமிழகத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள், மீண்டும்
அமலுக்கு வந்துள்ளன.
இதன் ஒரு கட்டமாக, பள்ளி, கல்லுாரிகள் மூடப்
பட்டு, மாணவர்கள் வீட்டில் இருந்தே படிக்கவும்,
தேர்வு எழுதவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், பொதுத்தேர்வு
எழுத வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
மற்ற மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் மற்றும்
ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல்
பாஸ்' என்ற, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்
பட்டுள்ளது.
இந்நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கு, ஒவ்வொரு பள்ளி
யிலும், புதிதாக பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்
டுள்ளன. இந்த பயிற்சி புத்தகங்கள் மற்றும் நோட்டு
புத்தகங்களில் உள்ள கேள்விகளுக்கு, மாணவர்கள்
வீட்டில் இருந்தே விடை எழுத வேண்டும் என, பள்ளி
களுக்கு, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மாணவர்களின் கற்றல் திறனை தெரிந்து
கொள்ளும் வகையில், இந்த தேர்வு நடத்தப்படு
வதாகவும், மாணவர்களை கட்டாயப்படுத்தாமல்,
பயிற்சி புத்தகங்களில் உள்ள கேள்விகளுக்கு பதில்
எழுத அறிவுறுத்துமாறும், தலைமை ஆசிரியர்க
ளுக்கு யோசனை வழங்கப்பட்டுள்ளது.
'இந்த தேர்வின் முடிவில், மாணவர்களின் கற்றல்
திறன் குறித்து, மாநில அளவில் பட்டியல் தயா
ரித்து, மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்ட
அறிக்கையில் குறிப்பிடப்படும்' என, அதிகாரிகள்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment