கொரோனாவின் 2-வது அலை வீசுவதால் பல்வேறு மாநிலங்களிலும், இதற்கிடைய பள்ளிகளை மூடுவது, தேர்வுகளை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. 


மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.), மத்திய பள்ளி தேர்வு கவுன்சில் ஆகியவை கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன், போதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 10, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்துவது என்று முடிவு செய்திருந்தன. 

செய்முறை தேர்வுகள் நடந்துள்ள நிலையில், ஜூனில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக டுவிட்டர் மற்றும் சமூக வலைத்தளங்களில் “கேன்சல்போர்டு எக்ஸாம்-2021” என்ற ஹேஸ்டேக் வேகமாக பரவி டிரெண்டிங்கில் இடம் பிடித்தது. 


மேலும் சேஞ்ச்.ஆர்க் (change.org) இணையதளம் வழியாக, ஒரு மனு பிரபலமாக அதிகம் பேரால் பகிரப்பட்டது. அந்த மனுவில், “இந்தியாவில் கொரோனா நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருக்கிறது. தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. 

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த மனுவை ஆதரித்து பகிர்ந்து உள்ளனர். இதில் மாணவர் குறிப்பிடும்போது, “ஆன்லைனில வகுப்புகள் நடந்ததுபோல ஆன்லைனில் தேர்வுகள் நடத்தலாம் அல்லது முந்தைய தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கலாம்” என்று கூறி உள்ளார். ஆனால் தேர்வு தள்ளிவைப்பது தொடர்பாக சி.பி.எஸ்.இ. எந்த கருத்தும் தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post

Search here!