சி.பி.எஸ்.இ. அறிவிப்பை தொடர்ந்து சி.ஐ.எஸ்.சி.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ஒத்திவைப்பு - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 17 April 2021

சி.பி.எஸ்.இ. அறிவிப்பை தொடர்ந்து சி.ஐ.எஸ்.சி.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ஒத்திவைப்பு

கொரோனா நோய்த் தொற்று நாடு முழுவதும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி முதல் தொடங்கி நடைபெறுவதாக இருந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தும், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைத்தும் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. 


அதனைத் தொடர்ந்து தற்போது சி.ஐ.எஸ்.சி.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ.) தலைமை நிர்வாகி மற்றும் செயலாளர் ஜெரி அரதூன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா தொற்றின் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையை கருத்தில் கொண்டு, ஐ.சி.எஸ்.இ. (10-ம் வகுப்பு), ஐ.எஸ்.சி. (12-ம் வகுப்பு) பொதுத்தேர்வு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

நோய்த் தொற்றை உன்னிப்பாக கவனித்து, மதிப்பாய்வு செய்யப்பட்டு, தேர்வு நடத்துவது குறித்த இறுதி முடிவு ஜூன் மாதம் @முதல் வாரத்தில் எடுக்கப்படும். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடக்கும்போது, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு நடக்கும். 

அதில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஒரு விருப்பம் வழங்கப்படுகிறது. அதன்படி, அவர்கள் அப்போது தேர்வு எழுத விருப்பம் தெரிவிக்காவிட்டால், அவர்களுக்கு சமரசமின்றி நியாயமான தேர்வு முடிவை சி.ஐ.எஸ்.சி.இ. உருவாக்கி வழங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment